Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா தொற்று…. நாளொன்றுக்கு 7 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

மெக்சிகோ நாட்டில் கடந்த 10 வாரங்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

மெக்சிகோ நாட்டில் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதியில் முதன்முறையாக கொரோனா தொற்றின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  கடந்த 2 வருடங்களுக்கு கூடுதலாக தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வரும் அந்நாட்டில் மொத்தம் 59,65,958 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 27ந்தேதி வரையில் 3 லட்சத்து 25 ஆயிரத்து 596 பேர் கொரோனா தொற்று பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மெக்சிகோ நாட்டில் கடந்த 10 வாரங்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டே வருகின்றது என அந்நாட்டு நோய் தடுப்பு மற்றும் சுகாதார வளர்ச்சி துறை உயரதிகாரி ஹியூகோ லோபஸ்-கடெல் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,  “மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது  அதிகம்  என அவர் கூறியுள்ளார். இருப்பினும் சமீப  வாரங்களாக சராசரியாக நாளொன்றுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு நாளைக்கு 5 பேர் என்ற சராசரி அளவிலிருந்து சற்று அதிகரித்துள்ளது.

Categories

Tech |