Categories
உலக செய்திகள்

“ஒரே தவணையில் 286 மாத சம்பளம்”…. கொத்தாக விழுந்த பணம்….. கெத்தாக தூக்கிகிட்டு ஓடிய ஊழியர்….!!!!

சிலி நாட்டின் கன்சோர்சியோ இண்டஸ்ட்ரியல் நிறுவனத்தின் ஊழியர் ஒருவருக்கு கவனக்குறைவாக இந்திய மதிப்பில் ரூ.40 ஆயிரம்-க்கு பதிலாக ரூ.1.42 கோடி ஊதியமாக அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஊழியர் ஒருவருக்கு 286 மாத சம்பளத்தை தவறுதலாக ஒரே தவணையாக செலுத்தியுள்ளது. அந்த ஊழியருக்கு மாத சம்பளம் இந்திய மதிப்பின்படி ரூ.40,000 மட்டுமே.
இந்த தவறு அந்த நிறுவனத்தின் கணக்கை சரி பார்த்தபோது தெரியவந்துள்ளது. உடனடியாக ஊழியரை தொடர்பு கொண்டு அதிகமாக அளித்த தொகையை திரும்ப கொடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.

இதனை ஏற்ற அந்த நபரும் தொகையை திரும்ப ஒப்படைப்பதாக கூறியுள்ளார். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதன் பின்னரே அவர் வேலையே ராஜினாமா செய்து தலைமறைவாகியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நிறுவனம் பணத்தை திரும்பப்பெற சட்ட அமைப்பை தொடர்பு கொண்டுள்ளனர்.

Categories

Tech |