Categories
தேசிய செய்திகள்

மக்களே…. “அமர்நாத் யாத்திரைக்கு ஒரு நாள் போதும்”… இதோ முழு விவரம்…!!!

காஷ்மீர் அமர்நாத் யாத்திரை ஒவ்வொரு ஆண்டும் 60 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் அயல் நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து பனிலிங்கத்தை தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான பனிலிங்க யாத்திரை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நாளை தொடங்குகிறது. அமர்நாத் யாத்திரை தொடங்குவதை முன்னிட்டு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு டெல்லியில் இருந்து ஒரே நாளில் அமர்நாத் யாத்திரையை முடிக்கலாம் என்ற தகவலை கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமர்நாத் கோயில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி நிதிஷ்குமார் கூறியது, இந்த ஆண்டு டெல்லியில் இருந்து பக்தர்கள் ஒரே நாளில் அமர்நாத் யாத்திரை முடிக்கலாம்.

இவர்கள் டெல்லியில் இருந்து விமான மூலம் ஸ்ரீ நகருக்கும், ஸ்ரீ நகரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பஞ்சதாரனி வரையும் சென்று அங்கிருந்து குகைகோயிலுக்கு செல்லலாம். இதனையடுத்து வழிபாட்டுக்குப் பிறகு ஹெலிகாப்டரை ஸ்ரீநகர் திரும்பினால், அங்கு நள்ளிரவு வரை டெல்லிக்கு விமான சேவை உள்ளது. அப்படி இல்லையென்றால் யாத்தீரிகள் ஸ்ரீநகரில் இருந்து நீல்கிராத் சென்றும் யாத்திரையை முடிக்கலாம். இதற்கு முன் இரண்டு இடங்களில் ஹெலிகாப்டர் சேவை வழங்கப்பட்டு. தற்போது நான்கு இடங்களில் ஹெலிகாப்டர் சேவை வழங்கப்படுகிறது. மேலும் ஸ்ரீநகர் நீல்கிராத் மற்றும் ஸ்ரீநகர் பஹல்காம் இடையில் ஒரு வழிப் பயணக் கட்டணம் முறையே 11,700 மற்றும் 10,800 ஆகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |