நடப்பு கல்வியாண்டில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு என்னும் எழுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டம் பற்றி தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது குழந்தைங்களுக்கு அவர்களின் தனித்திறனை கண்டறிய உதவும் விதமாக கல்வியின் குறிக்கோள் அமைய வேண்டும். எனவே குழந்தைகள் தங்கள் படைப்புத்திறனை ஆற்றலை உணரும் விதமாக பேசுதல், செயல்பாடுகள், கலைவினை செயல்பாடுகள், எழுதுதல், வெளிப்பாடு போன்றவற்றின் மூலமாக குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையிலான ஒரு திட்டமே இன்றைய தேவை.
பாடல், கதை, வாசித்தல், பொம்மலாட்டம், படைப்பு மற்றும் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட புதிய கற்பித்தல் முறை தேவையாய் அமைகின்றது. கொரோனா காரணமாக இரண்டு வருடங்கள் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது. 2020 ஆம் வருடம் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த குழந்தை 2021 ஆம் வருடம் இரண்டாம் வகுப்பு படிக்காமலேயே 2022-ம் வருடத்திற்குள் நுழைகின்றது. நேரடியாக மூன்றாம் வகுப்பு வருகையில் இந்த வருடங்களில் ஏற்பட்டிருக்கும் கற்ற இழப்பை பள்ளி வகுப்பறையில் செய்ய வேண்டி உள்ளது. மேலும் இணைய வழி வகுப்புகள் நடைபெற்றாலும் இணையம் மெதுவாக வேலை செய்யும் கிராமங்களில் பாடங்களை கவனிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
அதுபோலவே ஸ்மார்ட் போன்கள் இல்லாத குடும்பங்களும் உண்டு அந்த குடும்பங்களின் குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் கற்றல் இழப்பு மற்ற குழந்தைகளுடையதைவிட அதிகம். இந்த தேவையின் அடிப்படையில் வரும் கல்வியாண்டில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்புகளுக்கான எண்ணும் எழுத்தும் திட்டம் வடிவமைக்கப்பட்ட நடைமுறைக்கு வருகின்றது. வரும் 2022 – 23 கல்வியாண்டில் தொடங்கியிருக்கும் இந்த திட்டத்தின் இலக்கு 2025ல் 8 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் என்னும் எழுத்தறிவும் கிடைத்துவிட வேண்டும் என்பதாகும்.
அதற்கேற்ற வகையில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயின்று வரும் குழந்தைகளின் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. செயல்வழியிலும், விளையாட்டு வழியிலும் குழந்தைகள் கற்றாலும் அவர்களின் கற்கும் திறனை வைத்து அவர்களை குழுக்களாக பிரித்து பாடங்களை கற்றுத் தருவது இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். மேலும் குழந்தைகளின் கல்வியை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்று அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும். மகிழ்ச்சியான கல்வி சூழலை உருவாக்கவும் எண்ணும் எழுத்தும் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கல்வியில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்தியிருக்கும் எண்ணும் எழுத்தும் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வி ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என தமிழக அரசு தெரிவித்து இருக்கின்றது.