Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் கடன் செயலியை பயன்படுத்த வேண்டாம்…. 20 லட்ச ரூபாய் வரை பறிகொடுத்த வாலிபர்…. எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர்….!!!!

கடந்து செயலி மூலம் பண மோசடி செய்த நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் தனது விவரம் மற்றும் புகைப்படத்தை அனுப்பியுள்ளார். மேலும் 13 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அந்த வாலிபர் தான் வாங்கிய கடனை திரும்ப செலுத்தி விட்டார். இந்நிலையில் அந்த வாலிபரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய  மர்ம நபர் ஒருவர் நீங்கள் வாங்கிய பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என கூறி  மிரட்டியுள்ளார். இதனால் பயந்து அந்த வாலிபர் மீண்டும் பணத்தை திரும்ப செலுத்தியுள்ளார்.

இதனையடுத்து மறுபடியும் அந்த மர்ம நபர்  கடன் வாங்காத வேறு சில செயலிகளின் பெயரை கூறி  பணம் கேட்டு மிரட்டியதோடு மட்டும் இல்லாமல்  அந்த வாலிபரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிடுவேன் என கூறி மிரட்டியுள்ளார். இதனால் பயந்த அந்த வாலிபர் 20 லட்ச ரூபாய் வரை செலுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பண மோசடி  செய்த மர்ம நபர்  குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் காவல் துறையினர் கூறியதாவது. பொதுமக்கள் கடன் செயலியை பதிவிறக்கம் செய்த உடனே அவர்கள்  செல் போனில் இருக்கும் அனைத்து விவரங்களும் அந்த மர்ம மோசடி நபர்கள் தெரிந்துகொள்வார்கள். இதன் மூலம் ஆபாச படத்தை அனுப்புவேன் என்று மிரட்டி பணம் பறிக்கின்றனர். எனவே பொதுமக்கள் கடன் செயலிகளில் மூலம் கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Categories

Tech |