குரூப் 2A தேர்வு முறைகேட்டில் 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகி இருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
குரூப்-4 தேர்வில் முறைகேடு வெளியான நிலையில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியது. இதை தொடர்ந்து TNPSC உரிய ஆவணங்களை CBCID போலீசிடம் ஒப்படைத்தது. அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த CBCIDI போலீசார் குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக காரைக்குடி பதிவாளர் அலுவலக உதவியாளர் வேல்முருகன் ,
நெல்லை பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஜெயராணி, திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலக உதவியாளராக உள்ள சுதாராணி , தலைமை செயலக ஊழியராக உள்ள சென்னை திருவிக நகரை சேர்ந்த விக்னேஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
குரூப் 2A தேர்வில் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்று அரசு பணியில் தொடரும் ஊழியர்கள் அடுத்தடுத்து கைதாகிய நிலையில் முறைகேட்டால் தேர்ச்சி பெற்ற அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் CBCIDI தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் எங்கு நாமும் கைது செய்ய பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 20க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தலைமறைவாகியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.