மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அறிக்கை ஒன்றே வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள கடத்தூர் காலனி பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் இருந்த பிறந்து 2 மாதம் ஆன ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. இந்த குழந்தை தற்போது பாதுகாப்பாக குழந்தை தத்து மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த குழந்தையின் பெற்றோர் அல்லது உரிமை உள்ளவர்கள் காந்திஜி சாலையில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தை ஒரு மாதத்திற்குள் தொடர்புகொண்டு குழந்தை பெற்று கொள்ளலாம்.
இந்நிலையில் சி. ஏ.ஆர். ஏ. என்ற ‘சென்ட்ரல் அடாப்ஷன் ரிசோர்ஸ் அதாரிட்டி’என்ற இணையதளம் மூலம் குழந்தைகளை தத்து கேட்டு விண்ணப்பித்துள்ள பெற்றோருக்கு இந்த குழந்தை தத்து கொடுக்கப்படும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்