2 நிறுவனத்தின் பூட்டை உடைத்து பணம் திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈங்கூர் சாலையில் சதாசிவம் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் சதாசிவம் சமையல் எரிவாயு நிறுவனமும், மேல் தளத்தில் ரவிச்சந்திரன் என்பவர் ஆயுள் காப்பீட்டு நிறுவனமும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6- ஆம் தேதி நிறுவனத்திற்குள் நுழைந்த 3 மர்ம நபர்கள் 2 நிறுவனங்களின் பூட்டை உடைத்து 45 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியுள்ளனர். இது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சதாசிவம் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய 2 பேரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையின் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று சென்னிமலை-எங்குர் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த அனோவர் உசேன், இஸ்லாம், மன்சூர் அலி ஆகிய 3 பேர் என்பதும், இவர்கள் சதாசிவத்தின் கட்டிடத்தில் அமைந்துள்ள 2 நிறுவனங்களில் இருந்தும் பணத்தை திருடியது இவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனை எடுத்து காவல்துறையினர் 3 மூன்று பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.