Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மீண்டும் இயங்கும் ஈரோடு-திருநெல்வேலி பயணிகள் ரயில்…. அறிக்கை வெளியிட்ட தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் ….!!!!

தெற்கு ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மற்றும் தெற்கு ரயில்வே ஆலோசனை குழு முன்னால் உறுப்பினருமான கே.என்.பாஷா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஈரோட்டில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் கடந்த 2 1/2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின்   காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் வருகின்ற ஜூலை 11-ஆம் தேதி முதல் ஈரோடு-திருநெல்வேலி பயணிகள் ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதேபோல் ஈரோட்டில் இருந்து மதியம் புறப்படும் இந்த ரயில் கொடுமுடி, கரூர், திண்டுக்கல், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய  வழியாக  திருநெல்வேலியை  சென்றடையும். இதனையடுத்து காலை 6.15 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மதியம் 2:30 மணிக்கு ஈரோட்டை வந்தடைகிறது. அதேபோல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈரோடு-பாலக்காடு பயணிகள் ரயில் வரும் ஜூலை மாதம் 29-ஆம் தேதி முதல் தொடங்கப்படும்  என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |