ஒலி மாசுபாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சென்னை மாவட்ட முழுவதும் வருகின்ற ஜூலை 3-ஆம் தேதி வரை ஒளி மாசுபாடு விழிப்புணர்வு கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக நேற்று மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் கமிஷனர் சபீர் குமார் சி. சரத்தர், இணை கமிஷனர் ராஜேந்திரன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் துணை இயக்குனர் ராஜேந்திரன், மாணவ- மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கமிஷனர் சங்கர் ஜிவால் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தமிழ்நாடு முழுவதும் தற்போது வாகன ஓட்டிகள் ஒலி மாசுபாடு ஏற்படுத்தினால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நடைமுறைக்கு வந்தால் அபராத தொகை 1000 முதல் 2000 வரை வசூலிக்கப்படும். இந்நிலையில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பொறுத்திருக்கும் வாகன ஓட்டிகள் மட்டும் இல்லாமல் அவற்றை பொருத்தி கொடுக்கும் மெக்கானிக் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் முககவசம் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.