சின்னசேலம் பகுதியில் விபத்துக்களை தடுப்பதற்காக சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்ன சேலத்தை அடுத்த அம்மையகரம் கிராம எல்லையில் செல்லும் சேலம்- சென்னை இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகின்ற நிலையில் விபத்துக்களை தடுப்பது மற்றும் சாலையை விரிவாக்கம் செய்வது பற்றி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் கோட்டாட்சியர் பவித்ரா, போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், தேசிய நெடுஞ்சாலை திட்ட மேலாளர் சதீஷ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார்கள்.
இதையடுத்து அவர்கள் கூறியதாவது, அம்மையகரம் பகுதியில் விபத்துகள் நடப்பதை தடுப்பதற்கு உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்படும். மேலும் சாலையின் நடுவில் வண்ண விளக்குகள் பொருத்தப்படும். சாலையை விரிவுபடுத்துவது போன்ற பணிகள் செயல்படுத்தப்படும் என கூறினார்கள்.