கார் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பட்டணம் காலனி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சொந்தமாக கார் வைத்து தொழில் நடத்தி வந்தார். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நாகப்பன் காரை விற்று விட்டு ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை சரியாக கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த நாகப்பன் திண்டிவனம்-செஞ்சி பேருந்து நிறுத்தத்தில் வைத்து விஷம் குடித்து மயங்கி கடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் நாகப்பனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.