பிரான்ஸ் நாட்டில் வாத்து கூட்டத்துக்காக மொத்த சாலையும் சற்று நேரத்திற்கு நிறுத்தி வைத்த பாதுகாப்பு ஆபீஸரை நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் என்ற சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் வாத்து கூட்டத்துக்காக மொத்த சாலையையும் சற்று நேரத்துக்கு நிறுத்தி வைத்துள்ளார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை அதிகாரி. போக்குவரத்து பணிகளில் ஈடுபடும் காவல்துறையினர் பலர் மனிதாபிமானத்துடன் இருக்கிறார்கள். மேலும் இந்த செயல்கள் மக்களின் மனதை வென்றுள்ளது. இதனை அடுத்து தாய் வாத்து ஒன்று தனது குட்டி வாத்துக்களுடன் சுற்றித்திரிந்துள்ளது. அப்போழுது சாலையை கடக்க முற்பட்ட அந்த வாத்துக்கூட்டம் வாகனங்கள் தொடர்ந்து வந்ததால் கடக்க முடியாமல் திணறியிருக்கிறது.
இதனைக் கண்ட அந்த செக்யூரிட்டி ஆபிசர் தனது கையை அசைத்து வாகனங்களை நிறுத்தச் செய்து வாத்துக்கூட்டம் சாலையை கடக்க உதவி செய்திருக்கிறார். இந்த நிகழ்வை அங்கிருந்த மக்கள் தங்களின் மொபைலில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். பாதுகாப்பு அதிகாரியின் இந்த செயல் மிகுந்த நெகிழ்ச்சியை கொடுப்பதாகவும், ஆறு அறிவு உள்ள மனிதர்களை காப்பதற்கே தவறும் வாழ்வில் வாத்துக்களுக்கு உதவியது பெருமைமிகு தருணமாக இருக்கிறது எனவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். மேலும், சோனிக் படத்தில் வரும் காட்சி நிஜத்தில் நடந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.