செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், நான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச்செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அம்மாவுடைய கொள்கைகளை, அம்மாவுடன் லட்சியங்களை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டு வருவோம். இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதே அம்மாவினுடைய கட்சி,
இன்றைக்கு தவறானவர்கள் கைகளில் மாட்டி விட்டது. அந்த புனித சின்னம் எம்.என். நம்பியர் கையிலேயே மாட்டியது போல் இருக்கிறது என்று அன்றிலிருந்தே சொல்லி கொண்டே இருக்கிறேன், அது உண்மையாக இருக்கிறது. வருங்காலத்தில் அதை மீட்டெடுக்க கூடியவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் தான்.
நிச்சயமாக வருங்கால சரித்திரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அம்மாவின் கட்சியை மீட்டெடுத்தது என்கின்ற நிகழ்ச்சி நடைபெறும். ஓபிஎஸ்-ஸை ரகசியமாக போய் சந்திக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது, எதோ பேசவேண்டும் என சொல்கிறார்கள்.
பொதுக்குழு பல கோடி ரூபாய் செலவு செய்தும் அவர்கள் எண்ணத்திலும் நீதிமன்றத்தின் மண்ணை அள்ளி போட்டதினால் அவர்கள் ஏதோ பேசுகிறார்கள். பொது பொதுச்செயலாளர் அம்மாவுக்காக வைக்கப்பட்டிருந்தது, அம்மாவிடமிருந்து வாங்கி வைக்கிறார்களா ? பணம் பத்தும் செய்யும் என்று சொல்வோம், பணம் பாதாளம் வரையும் பாயும் என்று சொல்வார்கள், அது பாய்ந்துவிட்டது.
நல்லவேளையாக அதில் நீதிமன்றம் தலையிட்டு அன்றைக்கு தடுத்துவிட்டது. மறுபடியும் அப்படி ஒரு நிகழ்வு நடந்தால், அம்மாவுடைய கட்சியினுடைய அழிவை யாராலும் தடுக்க முடியாது. வருங்காலத்தில் நாம் தான் அதை மீட்டெடுக்க முடியும் என்று சொன்னதுபோல் தான் நடக்கும் என தெரிவித்தார்.