Categories
அரசியல் மாநில செய்திகள்

யப்பா சான்ஸே இல்ல…! ஓபிஎஸ்_க்கு செம துணிச்சல் தான்… திமுகவுக்கு லாபம் தான் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், ஐபிஎல் போட்டிக்கு வீரர்களை தேர்ந்தெடுக்கும் போதெல்லாம் 4 கோடி 10 கோடி போட்டு வாங்குகிறார்கள். அதிமுகவில் ஒவ்வொரு நபரையும் வாங்குவதற்கு 25 லட்சத்தில் இருந்து 5 கோடி வரைக்கும் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள், இப்படி அவர்களுடைய தவறான எண்ணம் நிறைவேறாமல் போய்விட்டது.

அதிமுக சண்டை பாஜகவிற்கு லாபமா இல்லையான்னு தெரியாது, ஆனால் திமுகவிற்கு இது வசதியாக போய்விட்டது. இந்த பிரச்சனையால் திமுக ஆட்சியினுடைய செயல்பாடு பற்றி யாரும் பேசுவதில்லை, நான் அன்றைக்கு சொன்னது போல், என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு என்பது போல் ஸ்டாலின் அவர்கள் சொன்ன வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் போய்விட்டது, இந்த அடிதடி சண்டைதான் இருக்கிறது.

அதனால் திமுகவிற்கு தான் லாபம், ஆனால் அம்மா முன்னேற்ற கழகம் வருங்காலத்தில் திமுகவிற்கு நிச்சயம் பாடம் புகட்டும். சாலை பணிக்காகவோ வேறு எதற்காகவோ சாலையை தோண்டி சரியாக மூடாமல் விட்டு விட்டார்கள் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்காமல் ஆட்சியாளர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். லாக்கப் மரணம் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. அதற்க்கு முதலமைச்சர் தான் பதில் சொல்ல வேண்டும்.

ஓபிஎஸ்_ஸை வாட்டர் பாட்டில் கொண்டு எறிந்தார்கள், அங்கு இருந்தவர்கள் வேறு எதைக் கொண்டு வேணாலும் அடித்திருப்பார்கள் என்று அவருக்கு தெரியும். ஆனால் திரு. வைத்தியலிங்கம், ஜே.டி.சி  பிரபாகரன் இவரெல்லாம் நல்ல துணிச்சலா அங்க போயிட்டு, அது என்ன கூட்டம் என்று சொல்வது வார்த்தையே இல்லை….

அந்த அயோக்கியர்களின் கூட்டத்தின் நடுவிலே சென்று வந்ததே  பெரிய விஷயம் தான். அதை நான் பாராட்டுகிறேன். இதுபோன்று இந்த இயக்கம் நடக்கிறது, பணத்திற்காக தான் இயங்கிக்கொண்டிருக்கிறது, பணத்தை அடிப்படையாக வைத்துதான் இயங்குகிறது, தொண்டர்களை வைத்து இயக்கவில்லை என்று தான் நான் இந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தேன் என தெரிவித்தார்.

Categories

Tech |