Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானை மிரட்டி விட்டு… கிழக்கு ஆப்பிரிக்காவில் முகாம்…. வெட்டுக்கிளிகளால் வேதனையடையும் மக்கள்..!!

70 ஆண்டுகளில் இல்லாத வகையில், வெட்டுக்கிளிகள் கூட்டம் பாகிஸ்தானைத் தொடர்ந்து  கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் படையெடுத்து சென்று வேளாண் பயிர்களை நாசம் செய்யத் தொடங்கியுள்ளது.

இந்த வெட்டுக்கிளிகளையெல்லாம்  சிறிய ரக விமானங்கள் மூலம், பூச்சிமருந்து தெளித்து விரட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை பார்க்கும் போது நமக்கு கண்டிப்பாக நியாபகம் வருவது சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “காப்பான்” படம் தான். அந்த படத்தில் வில்லன் தரப்பில் இருந்து, வெட்டுக்கிளிகளை வளர்த்து ஏவி, வேளாண் சாகுபடியை நாசமாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். தற்போது அந்த காட்சிகளை போலவே அண்மை காலமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன.

Image result for The locust swarm East Africa, spray planes"

வெட்டுக்கிளிகள் அனைத்தும் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வந்து பயிர்களை தின்று நாசம் செய்வதை செய்திகள் நிஜமாக்கி வருகின்றன. அது தான் உண்மை. ஆம் கடந்த மாதம் இதுபோல, குஜராத் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் அனைத்தும் முகாமிட்டு, அப்பகுதி விவசாயிகளை பாடாய் படுத்திவிட்டன. இந்த நிலையில் தற்போது, பாகிஸ்தானை மிரட்டி வந்த பல லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் தொடர்ந்து, கிழக்கு ஆப்பிரிக்காவிலும், பல முகாமிட்டு பயிர்களை வேட்டையாடி வருகிறது.

Image result for The locust swarm has invaded Pakistan and East Africa, destroying agricultural crops."

இதற்கு என்ன தான் செய்ய என்று விவசாயிகள் நிலைகுலைந்துபோயுள்ளனர். வெட்டுக்கிளியால் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று கேட்குறீர்களா? வெட்டுக்கிளிகளை பொறுத்தவரை அது தமது உடல் எடைக்கு நிகராக, அதாவது சரிக்கு சமமாக உணவை இரையாக்குகின்றது. அதனால் தான் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து போய் நிற்கின்றனர்

பாகிஸ்தானின் பஞ்சாப் உள்ளிட்ட மாகாணங்களில் அட்டூழியம் செய்த வெட்டுக்கிளிகளால் தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் அனைத்தும் இந்தோனேசியாவில் இருந்து படையெடுத்து வந்திருப்பதாக கூறப்படுகின்றது. பாகிஸ்தானைத் நிலை குலையச்செய்த வெட்டுக்கிளிகள் கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா, உகாண்டா, தெற்கு சூடான், எரித்திரியா என அடுத்தடுத்து கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளையும், ஒரு வழியாக்காமல் விடமாட்டேன் என்று பயிர்களை நாசம் செய்யத் தொடங்கியிருக்கிறது.

Image result for The locust swarm East Africa, spray planes"

இதையடுத்து, வெட்டுக்கிளிகள் அனைத்தையும் விரட்டுவதற்காக இலகு ரக விமானங்கள் மூலம், பூச்சி மருந்து தெளித்து விரட்டியடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒருமுறை வெட்டுக்கிளிகள் படையெடுத்து விட்டாலே அவ்வளவுதான், சுமார் 2,00,000 டன் உணவு பொருள் உற்பத்தி பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. தற்போதைய காலம் வெட்டுக்கிளிகளுக்கு ஏற்ற காலமாக அமைந்திருக்கிறது.

அதாவது இளவேனிற்காலம், வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கத்திற்கு உகந்த பருவம். ஆகவே அவற்றை உலக நாடுகள் ஒன்றிணைந்து கட்டுப்படுத்த வேண்டும் என பன்னாட்டு சுற்றுசூழல் வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். அப்படி செய்யாவிட்டால், அவை, 500 மடங்கு அளவிற்கு பெருகிவிடக்கூடிய ஆபத்து உள்ளதாகவும் எச்சரிக்கை விடுகின்றனர்.

Categories

Tech |