Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் சிங்கங்கள்…! ADMKவில் இருப்பது அசிங்கங்கள்…. போட்டு தாக்கிய டிடிவி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,   நம்ம ஊரில் சொல்வார்கள் வினை விதைத்தவன் வினை அறுப்பான், அதைபோன்று உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்பை செய்தவன் தண்டனை பெற வேண்டும். நாங்கள் திணை விதைத்தவர்கள், நாங்கள் திணை அறுப்போம்.  ஏதோ கடந்த பாராளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறாத காரணத்தினால் எனது கட்சியே போய்விட்டது என்றார்கள், இன்றைக்கு தலைமை கழக நிர்வாகிகள் மட்டும் தான் இருக்கிறார்கள் 320 பேர் இருக்கிறார்கள் எல்லாரும் என் உடன் தோளோடு தோல் நிற்கிறவர்கள்.

ஆட்சி, அதிகாரம், பணம், வசதி, வாய்ப்பு எல்லாத்தையும் தாண்டி என்னோடு நிற்பவர்கள். இவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலாளர் நான், பணம் கொடுத்தோ, காசு கொடுத்தோ பலத்தை காட்ட வேண்டிய அவசியம் இல்லாதவன் டிடிவி தினகரன். ஏனென்றால் அவர்களுடன் ஒருவனாக நான் இருக்கிறேன். இன்னொரு கட்சியை விட்டு நாங்கள் வந்து ஐந்து வருடம் ஆகிறது, அங்கு இருக்கின்ற பல நண்பர்கள், முன்னாள் நண்பர்கள் சொல்வார்கள் எதற்கு நீங்கள் அவசரப்பட்டு கட்சி ஆரம்பித்தார்கள்.  அங்கு இருக்கிறது அம்மாவுடைய தொண்டர்கள் சிங்கங்கள் எல்லாம் எங்களுடன் வந்து விட்டார்கள், அங்கே இருக்கிறது அசிங்கங்கள் தான்.

அன்றைக்கு  பொதுக்குழு கூட்டத்தில் கேள்விப்படாத அளவிற்கு நடந்து கூத்துகள் எல்லாம் பார்த்தோம். அதனால் தான் வந்து அம்மாவுடைய கொள்கைகளை தொடர்ந்து நிலை நாட்டிட,  அம்மாவின் உண்மையான ஆட்சி அமைந்திட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினோம். தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு வருங்காலத்தில் அங்கீகாரம் கொடுப்பார்கள் என்கின்ற எண்ணத்தோடு நாங்கள் எங்கள் பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |