மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தின் மூலமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு எங்கிருந்தாலும் ரேஷன் பொருட்களை வாங்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுகிறது. இடங்களில் இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்தியாவில் எங்கிருந்தாலும் பொருட்களை வாங்கி கொள்ளலாம். இந்நிலையில் அரசு தரப்பில் ரேஷன் கார்டு சம்பந்தமாக முக்கிய அறிவிப்பு ஒன்னு வெளியாகியுள்ளது.
அதாவது ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் ரேஷன் பொருட்களையும், அரசு நலத்திட்ட உதவிகளையும் பெறுவதில் சிக்கல் ஏற்படும். ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டை இணைப்பதற்கான கடைசி தேதி முதலில் மார்ச் 31 ஆக இருந்தது. ஆனால் நிறையப் பேர் இணைக்காமல் இருந்தனர். இதனால் இதனுடைய காலக்கெடு இன்று (ஜூன் 30-ஆம் தேதி) வரை நீட்டிக்கப்பட்டது. எனவே ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்காமல் இருப்பவர்களுக்கு இன்றோடு காலக்கெடு முடிவடைகிறது.