Categories
தேசிய செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு….! கால்நடைகளை தாக்கும் ஆந்த்ராக்ஸ் நோய்….. பீதியில் மக்கள்….!!!!

கேரளாவின் அதிரப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஆந்த்ராக்ஸ் நோய் தாக்குதலால் பல காட்டு பணிகள் உயிரிழந்து வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதிரப்பள்ளி வனப்பகுதியில் காட்டு பன்றிகளுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். அதிரப்பள்ளி வனப்பகுதியில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக இறந்துள்ளதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறை கால்நடை, பராமரிப்பு துறை, வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு அதில் ஆந்த்ராக்ஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இயற்கையாகவே மண்ணில் இருக்கும் ஆந்த்ராக்ஸ் என்ற பாக்டீரியா பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வீட்டு விலங்குகள் மற்றும் வனவிலங்குகள் அதை தொடர்பு கொள்ளும்போது பாதிப்படைகின்றது என்றும் கூறப்படுகின்றது. பகாட்டுப்பன்றிகளின் சடலங்களை அகற்றி புதைக்கச் சென்றவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். காட்டு பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் கூட்டமாக இறப்பது கண்டறியப்பட்டால் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மேலும் இது போன்ற இடங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் கண்டறியப்பட்டால் அதிகாரிகளிடம் புகார் அளிக்கும்படி மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |