அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியதாக செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.
செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி கைகட்டிக் கொண்டு எவன் எவன், ஓபிஎஸ் அண்ணன் முன்னாடி நின்னானோ, அவன் எல்லாம் குழி பறிச்சு பார்க்கிறீங்க. ஒன்னும் ஆக போறது இல்ல. விடிய விடிய வந்த தீர்ப்பு மாதிரி தொடர்ந்து அதே தீர்ப்பு தான் வரும்.
ஓபிஎஸ் தான் வெற்றி பெறுவார். அவர உங்களால ஜெயிக்க முடியாது, அதுதான் நடக்க போகுது. நீங்க பார்த்துட்டே இருங்க, தமாசா இருக்கும். கடந்த 23 பொதுக்குழு இல்லையா ? 22ஆம் தேதி என்ன பண்ணுனேன் ? நான் சீப் மினிஸ்டர் உள்ளிட்ட 6, 7 செக்கரட்டரிக்கு… காஞ்சிபுரம் கலெக்டர், வேலூர் கலெக்டர் கொரோனா கட்டுப்பாடு எல்லாம் கொண்டு வந்துட்டாங்க.
50 பேருக்கு மேல சேக்க வேண்டாம் என சொல்றாங்க. ஒரு பொலிட்டிக்கல் கட்சி இவ்வளவு பேரா சேக்குது, காஞ்சிபுரம், வேலூர் இந்த இரண்டு கலெக்டரும் உத்தரவு போட்டுடாங்க . திருவள்ளூர் மாவட்டத்தில் தான் இந்த வானகரம் வருது. ஆகவே அந்த கலெக்டர் போடாம இருக்காங்கன்னு சொல்லி முதல்வருக்கு கடிதம் எழுதினேன். கொரோனா வரும், கொரோனா வந்ததுன்னா பரவும். அங்க 2000, 3000 பேர் சேருவான் அப்படிங்கறதெல்லாம் நான் முதல்லயே அழகா எழுதிட்டேன் 22ஆம் தேதி. நான் வெளியில சொல்லல இதை.
வேண்டாம் நாம ஏதோ நிறுத்த போறோம் பொதுக்குழுவைனு சொல்லுவாங்கன்னு சொல்லி நான் சொல்லல. இப்போ நாம சொன்ன மாதிரியே…. முன்னாள் சபாநாயகர் தனபால், கடம்பூர் ராஜு, எடப்பாடியின் உதவியாளர், எடப்பாடியின் துணைவியார் என கொரோனா பரவ ஆரம்பிச்சுடுச்சு. நான் என்ன கேட்கிறேன் ? அங்க 2000 பேர், 3000 பேர் இருந்தாங்க அல்லவா ? அதில் எவ்வளவு பேருக்கு கொரோனா சொல்லுங்க ? எவ்வளவு பேருக்கு பரவி இருக்கும் சொல்லுங்க ? என கேள்வி எழுப்பினார்.