மின் விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்று மின் ஊழியர்களுக்கு மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழுதடைந்த கம்பிகள், வயர்கள், டிரான்ஸ்பார்மர்கள், கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டும். மின்சார சீரமைப்பு பணிகளின்போது ஊழியர்கள் பாதுகாப்பு ஷூ உள்ளிட்ட உபகரணங்களை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
அதிக அளவில் மரம் வளர்ந்து இருந்தாலோ, முறிந்து விழும் நிலையில் இருந்தாலோ அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். சட்டவிரோத மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். போலீசில் புகார் அளிப்பதை மின் வாரிய அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.