Categories
மாநில செய்திகள்

கோவை: வேகமெடுக்கும் கொரோனா… “கன்ட்ரோல் ரூம்” திருந்துட்டாங்க…. ஒரே நாளில் இவ்வளவு வசூலா?…..!!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் பரவ தொடங்கியுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்ட நகராட்சி நிர்வாக நோய் தடுப்பு நடவடிகளை தீவிரட்டு உள்ளது. அதாவது மக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதனையடுத்து மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கண்ட்ரோல் ரூம் பொறுப்பாளர் முகுந்தன் கூறியது, கொரோனா கட்டுப்பாட்டு அறையை 0422 2300132 மற்றும் 0422 2302323 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு நோய் குறித்த சந்தேகங்கள், தடுப்பூசி உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்து கொள்ளலாம்.

இதனையடுத்து தொடர்பு கொண்டவர்களின் குறைகள் உடனுக்குடன் தீர்வு காணப்படும். அது மட்டுமில்லாமல் நோய் பாதித்து வீட்டு தலைமையில் இருப்பவர்களை தினமும் தொடர்புகொண்டு சிகிச்சை, ஆரோக்கியம் குறித்து கேட்டு வருகிறோம். மேலும் நோயாளிகளுக்கு தேவையான ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார் கூறியது, கொரோனா பாதிப்பு ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து இதுவரை ரூ.2,30,79,625 இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் ரூ.11400 வசூலிக்கப்பட்டுள்ளது. இது போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியதுடன் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |