அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி அதிமுக அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை செய்து பட்டியல் எடுக்குமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி, இப்போது சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ரொம்ப நல்ல அமைச்சர். அவர் நேத்து என்ன பண்றாரு ? முக கவசம் போடணும்னு சொன்னாரு. பத்தாம் தேதி அன்று ஒரு லட்சம் இடத்தில் தடுப்பூசி முகாம் என்று சொல்கிறார். அப்ப 11ஆம் தேதி எப்படி பொதுக்குழு கூட்டம் நடத்த முடியும்னு சொல்ற நீ ? எப்படி நடத்துவது ? யார் யார் பொதுக்குழு வந்தாங்களோ 2800, 3000மா என எனக்கு தெரியாது.
முதலில் கவர்மெண்ட் என்ன பண்ணனும் ? கட்டுப்பாடு போடணும். போலீசையும், சுகாதாரத்துறையையும் வச்சு முகவரி எல்லாம் எடுத்து அவர்களுக்கெல்லாம் கொரோனா இருக்கா ? இல்லையா என்று வீடு வீடா போய் செக் பண்ணனும், ரொம்ப சீரியஸா…அப்படித்தானே பண்ணுனோம். பேரிகேட்டை போட்டோம், வீடுவீடா செக் பண்ணுனோம். லிஸ்ட் கேளுங்க அதிமுக தலைமை கழகத்திலிருந்து. சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் செய்வார் என்று நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
முதலமைச்சர் சொன்னார் என்று சொல்கிறார். இந்த விஷயத்துல தலையிடாதீங்கன்னு.. ஆனா உயிர் முக்கியம்.. நாட்டில் உயிர் முக்கியம். கட்சியெல்லாம் தூக்கி எறிங்க, வேற விஷயம். இப்போ கொரோனா தாண்டவம் ஆடுது. நீங்களே சொல்லுறீங்க வேகமா பரவுது என்று… இப்ப எவ்வளவு பேர் கொரோனா வந்து பொதுக்குழுவுல கலந்துக்கிட்டு எடுத்துட்டு போயிருக்காங்க. அவங்க வீட்டில இருக்குறவுங்களுக்கு பரப்புவாங்க.பக்கத்துல இருக்குறவுங்களுக்கு பரப்புவாங்க. லிஸ்ட்டை ஏடிஎம்கே ஆபீஸ்ல இருந்து கவர்மெண்ட் எடுங்க. எடுத்து எல்லா இடத்திலும் போய் செக் பண்ணுங்க என தெரிவித்தார்.