கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது. டாக்டர் கிரிங்கஸ்க் தலைமையிலான டாக்டர்கள் குழு இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது.
கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சீனாவுக்கு அடுத்தப் படியாக தாய்லாந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் அந்த நாட்டில் 19 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு , தொடர் சிகிச்சை பெற்று கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த வைரஸ் தொற்றுக்கு உலக சுகாதார நிறுவனம் உட்பட பல்வேறு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்க முடியாமல் திணறிவந்த நிலையில் கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை தாய்லாந்து கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ளது. அந்நாட்டின் இந்த அறிவிப்பு உலக நாடுகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
அந்நாட்டின் டாக்டர் கிரிங்கஸ்க் தலைமையில் மருத்துவர்கள் அடங்கிய குழு இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது. முதலில் இந்த மருத்துவ குழு எச்.ஐ.வி. தடுப்பு மருந்தில் சில மாற்றங்கள் செய்து நோயாளிகளுக்கு கொடுத்ததில் அதில் எந்த பலனும் கிடைக்கவில்லை.
தொடர்ந்து கடும் முயற்சியில் ஈடுபட்ட மருத்தவ குழு கடுமையான காய்ச்சலுக்கு வழக்கமாக கொடுக்கும் தடுப்பு மருந்துடன் எச்.ஐ.வி. கிருமி தொற்று நோய்க்கான தடுப்பு மருந்தையும் கலந்து கொரோனா வைரசை குணப்படுத்தும் மருந்தாக மாற்றி அசத்தியுள்ளார். இதனால் உலக அளவில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்த ஆய்வாளர்கள் , டாக்டர்களை நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.
சீனாவில் இருந்து தாய்லாந்துக்கு வந்திருந்த 71 வயது பெண் 3 நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் பாதிப்புடன் பாங்காங்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த பெண்ணுக்கு மருத்துவர்கள் கண்டறிந்த மருந்தை கொடுத்த 48 மணி நேரத்துக்குள் அவரின் உடல்நிலை சரியாகியது.
இதனால் காய்ச்சல் + எச்.ஐ.வி. தடுப்பு மருந்துகளின் கலவை உலக நாடுகளின் மருத்துவர்கள் மற்றும் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த புதிய வகை மருந்தினை அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகள் தங்களின் ஆய்வகங்களில் சோதனை செய்து வருகின்றன. இதில் வெற்றி அடைந்தால் உலகையே மிரட்டிக்கொண்டு இருக்கும் கொடிய கொரானா வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மேலும் தமிழக பாரம்பரிய வைத்திய முறையான சித்த மருந்து மூலமாகவும் கொடூர கொரானோ வைரசை மிக, எளிதாக விரட்ட முடியும் என்ற தகவல்களும் வைரலாகி வருகின்றது.