பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்று அதிமுகவின் முன்னாள் நிர்வாகி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளராக இருக்கும் புகழேந்தி புதிய யோசனையை கூறியிருக்கிறார்.
செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி, கொரோனா வேகமாக பரவுது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டாம் என நான் எல்லாருக்கும் மனு அனுப்பிட்டேன். உள்துறை செயலாளருக்கு அனுப்பிட்டேன், சுகாதாரத் துறை செயலாளருக்கு அனுப்பிட்டேன், முதலமைச்சருக்கு அனுப்பிட்டேன், எல்லாத்துக்கும் அனுப்பிச்சாச்சு. ரெண்டு தடவ அனுப்பிச்சி இருக்கேன். நேற்று ( 28ஆம் தேதி, 22ஆம் தேதி ஒன்னு ) ரெண்டையும் சொல்லி இருக்கேன்.
நான் சொன்ன மாதிரி தான் கொரோனா பரவி இருக்கு. தமிழக அரசுக்கு இன்னொரு அன்பான வேண்டுகோள், சட்டப்படி பொதுக்குழுவுக்கு வந்த அத்தனை பேருக்கும், பொதுக்குழுல யாரெல்லாம் உள்ள போனாங்களோ… அவர்கள் எல்லாரும் கொரோனா டெஸ்ட் பண்ணி இருக்கணும். அதற்குரிய ஆவண பணிகளை இந்த அரசு செய்யணும்னு நம்புறேன். இந்த மாதிரி தலைவலி இருக்கறதுனால தான் கூட்டம் கூட விடாதீங்க.
காஞ்சிபுரம், வேலூர், கோயமுத்தூர் கலெக்டர் மாதிரி 50 பேருக்கு மேல 100 பேருக்கு மேல சேர விடாதீங்க என்பது தான் என்னோட பணிவான வேண்டுகோள். இது அனுப்பிச்சாச்சு, ரெகார்ட் பண்ணியாச்சு நெக்ஸ்ட் நிச்சயமா நல்ல முடிவு எடுப்பார் முதலமைச்சர் . அவங்கவங்க அடிச்சுகிறது இல்ல சார், இது கொரோனா. அதனால் நல்ல முடிவு எடுப்பார் என நம்புவதாக புகழேந்தி பேசினார்.