Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் சந்தைகளில் விற்கப்படும் ஆயுதங்கள்…. பாகிஸ்தானிற்கு கடத்தல்…. தலிபான் படையினர் எச்சரிக்கை…!!!

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தலிபான்கள் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் பாதுகாப்பு படை வீரர்கள் தங்களுடைய ஆயுதங்களை விட்டு சென்றுள்ளனர். இதை தலிபான் தளபதிகள் ஆயுதச் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த ஆயுதங்கள் தற்போது பாகிஸ்தான் நாட்டிற்கு கடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கந்தகார் மாகானத்தில் தலிபான் பாதுகாப்பு வீரர்கள் ஏராளமான ஆயுதங்களை கண்டுபிடித்துள்ளனர்.

அதில் ஏகே-47 துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், கணினி வெடிகள் மற்றும் வெடிக்க தயாரான தோட்டக்கள் போன்றவைகள் இருந்தது. இந்த ஆயுதங்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக  3 பேரை தலிபான் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். மேலும் சட்டம் மற்றும் ஒழுங்கை காப்பாற்றுவதற்காக தனி நபர்கள் ஆயுதம் வைத்திருப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தலிபன் மூத்த காவல் அதிகாரி முல்லா அப்துல் கனி ஹக்பின் கூறியுள்ளார்.

Categories

Tech |