ரசாயனம் கலந்த மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் கோயம்பேடு பகுதியில் மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் ரசாயனம் கலந்து மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் கடைகளில் உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் 6 கடைகளில் இருந்து 7 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து கிருமி நாசினி தெளித்து அளித்துள்ளனர். மேலும் இதுபோன்று மாம்பழங்கள் விற்பனை செய்யும் கடைகளில் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.