Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப்-2ஏ முறைகேடு – மேலும் 3 பேர் கைது – சிபிசிஐடி அதிரடி …!!

குரூப் 2A தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் மேலும் 3 பேரை கைது செய்துள்ளனர்.

குரூப்-4 தேர்வில் முறைகேடு வெளியான நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக தகவல்கள் வந்த நிலையில் குரூப் 2A முறைகேடு சம்பந்தமாக தேர்வில் வெற்றிபெற்று தற்போது அரசு பணியில் இருக்கக்கூடிய 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாக இருப்பதாகவும் , அவர்களை CBCIDI போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும் சொல்லப்படுகின்றது.

இந்நிலையில் இந்த வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைதான நிலையில் மேலும் 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். தலைமைச்செயலகத்தில் ஊழியராக பணி புரியும் திருஞானசம்மந்தம் , பத்திரப்பதிவுத்துறையில் பணி புரியும் வடிவு , அரசு ஊழியர் ஆனந்தன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டுவந்த சிபிசிஐடி போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.  இதனால் குரூப் 2A தேர்வு முறைகேட்டில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |