தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளரான திரெளபதி முர்மு நாளை மறுநாள் சென்னை வருகை தரவுள்ளார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து ஜூலை 18-ஆம் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.
ஆளும் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவும் பிற கட்சிகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், நாளை மறுநாள் சென்னை வருகை தரும் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளரான திரெளபதி முர்மு, அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு கோருகிறார்.