தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர் மூலம் நிரப்புவார்கள். ஆனால் இதில் ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெறாதவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படப்படுகின்றனர் என்று புகார்கள் எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள், சங்கத்தின் தலைவர் ஷீலா மனு அளித்துள்ளார். அந்த மனுவில், தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் தற்காலிக ஆசிரியர் தேர்வு முறை ஆபத்தானது. இதற்கு தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.