Categories
சினிமா தமிழ் சினிமா

கடைசி நேரத்தில்…. கணவரை கட்டியணைத்து முத்தமிட்ட நடிகை மீனா…. கண் கலங்கிய பிரபலங்கள்….!!!

பிரபல நடிகை தன்னுடைய  கணவரின் உடலை கட்டிப்பிடித்து முத்தமிட்டது கண் கலங்க வைத்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகை மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு நையினிகா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் நடிகை மீனாவின் கணவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக நேற்று முன்தினம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அதற்கு முன்பாக வித்யாசாகரின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றது. அப்போது தன்னுடைய கணவரின் உடலை நடிகை மீனா கட்டி அணைத்து முத்தமிட்டார். இதைப்பார்த்து இறுதிச் சடங்கிற்கு சென்ற பிரபலங்கள் கண்கலங்கினர். மேலும் நடிகை மீனா கணவரை கட்டி அணைத்து முத்தமிடும் வீடியோவானது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |