புதிய ஆட்சியில் அலுவலகம் திறந்து வைப்பதற்காக நேற்று திருப்பத்தூருக்கு முதல்வர் மு க ஸ்டாலின் வருகை தந்திருந்தார். முதல்வரின் வருகையை முன்னிட்டு ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அங்குள்ள ஒரு தனியார் பள்ளியின் மைதானத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் வருகைக்காக வாழ மரங்கள் கட்டப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்கள் அனைவரும் கையில் கத்தியுடன் விழா முடியும் வரை காத்திருந்து விழா முடிந்த பிறகு அடித்துப் பிடித்து ஓடிச் சென்று வாழை மரங்களில் இருந்த வாழைத்தார்களை வெட்டி எடுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Categories