உக்ரைன் படைகள், ரஷ்ய நாட்டின் தலைமையகத்தை தாக்கி தகர்த்த வீடியோ வெளியாகியிருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதத்தில் போர் தொடுக்க தொடங்கியது. உலக நாடுகள் பல முறை கோரிக்கை விடுத்தும் தற்போது வரை அந்த போர் நிறுத்தப்படவில்லை. ரஷ்யா உக்ரைன் மீது தீவிரமாக போரிட்டுக் கொண்டிருக்கிறது. எனினும் உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல் நடத்திக்கொண்டு தான் இருக்கின்றன.
இதில், உச்சகட்டமாக உக்ரைன் படைகள் ரஷ்ய நாட்டின் தலைமையகத்தை பீரங்கி தாக்குதல் மேற்கொண்டு அழித்திருக்கின்றன. இது குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. அதன்படி, உக்ரைன் படைகள் D-30 என்னும் பீரங்கி மூலம் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், ஒரு குடியிருப்பில் இருந்த ரஷ்ய நாட்டின் தலைமையகம் முற்றிலுமாக தகர்க்கப்பட்டிருக்கிறது.