ஜி.எஸ்.டி வரிக்கு பா.ம.க தலைவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் சிறிய கிராமங்களில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பல பொருட்கள் பொட்டலங்களில் மடித்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த பொருட்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிக்க வேண்டும் என்று ஜி.எஸ்.டி கவுன்சில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் வணிக முத்திரையற்ற பொருட்களுக்கு கூட ஜி.எஸ்.டி வரி விதிக்க வேண்டும் என்று நினைப்பது ஏழை, எளிய மக்களை பாதிக்கும்.
இந்தியாவில் ஏற்கனவே பணவீக்கம் இருக்கும் நிலையில், அத்தியாவசிய பொருட்களுக்கும், பிற பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டால் விலைவாசி அதிகரிப்பதோடு பணவீக்கமும் உயரும். இதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதனையடுத்து ஜி.எஸ்.டி கவுன்சிலின் எந்த ஒரு முடிவுகளும் மத்திய மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்த முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே 5 சதவீத வரி விதிப்புக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது எனவும், இதற்கு தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.