திடீரென நில அதிர்வு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயத்தை சுற்றி மருதுறை, கீரனூர், நால்ரோடு, ஆலம்பாடி, சிவன்மலை உள்ளிட்ட 10-ம் மேற்பட்ட கிராமங்கள் இருக்கிறது. இந்த கிராமங்களில் நேற்று இரவு திடீரென நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வின் போது பெரிய சத்தம் ஒன்றும் கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த நில அதிர்வின் போது வீட்டில் உள்ள பாத்திரங்கள் கீழே உருண்டு விழுந்தததோடு, வீட்டில் உள்ள அனைத்துப் பொருள்களும் குலுங்கியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து உடனடியாக வெளியேறியுள்ளனர்.
ஆனால் சில மணி நேரத்திலேயே நில அதிர்வு நின்றதாகவும், அதன் பின் எந்த ஒரு சத்தமும் கேட்கவில்லை எனவும் பொதுமக்கள் கூறியுள்ளனர். மேலும் அப்பகுதி மக்கள் கல்குவாரியில் உள்ள பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டதால் ஏற்பட்ட நில அதிர்வாகத்தான் இருக்கும் என்று கூறுகின்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நில அதிர்வு ஏற்பட்டதா, இல்லையெனில் கல்குவாரியில் உள்ள பெரிய பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டதால் ஏற்பட்ட அசம்பாவிதமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.