Categories
தேசிய செய்திகள்

“படிப்புதான் எல்லாமே”…. இதுவே என் லட்சியம்…. ஒற்றைக்காலுடன் காண்போரை வியக்க வைக்கும் பள்ளி சிறுமி….!!!!

பீகார் மாநிலத்தில் உள்ள சிவான் பகுதியை மாணவி பிரியன்சு குமாரி பிறவியிலேயே தனது காலில் குறையுடன் பிறந்துள்ளார். இவர் பெற்றோரின் ஊக்கத்தால் ஒற்றைக் காலிலே துள்ளித் துள்ளிக் குதித்தபடி நடக்க பழகினார். இவருக்கு டாக்டர் சேவை செய்வதே லட்சியமாக உள்ளது. தனது உடற் குறையைப் போக்க பீகார் மாநில அரசும் மத்திய அரசும் உதவாத தினமும் 2 கிலோ மீட்டர் தூரம் ஒற்றை காலிலேயே கடந்து பள்ளி சென்று வருகிறார்.

இதையடுத்து தனக்கு செயற்கை கால் வழங்க வேண்டும் என மாநில அரசிடம் அந்த சிறுமி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் பிறந்ததிலிருந்தே இப்படித்தான் இருக்கிறேன் என்றும், அதற்காக என் கனவுகளை அடையாமல் விடமாட்டேன். என் கனவை நோக்கி நான் செல்ல எனக்கு செயற்கை கால் தேவைப்படுகிறது, இதற்கு அரசு உதவ வேண்டும் என்று உதவிக்கரம் நீட்டி உள்ளார் அந்த சிறுமி.

Categories

Tech |