இன்று ஹுகயான் மாகாணத்தில் உள்ள குயிங்பாஜியாங் பகுதியில் தீடிரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1ஆக பதிவாகியுள்ளது. சுமார் 10 வினாடிகளுக்கு அதிகமாக நில அதிர்வுகளை மக்கள் உணர்ந்ததாக சொல்லப்படுகின்றது.நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த நொடியே மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வீதியில் தஞ்சம் புகுந்தனர்.
அந்த பகுதியில் பயணம் செய்தவர்கள் உடனடியாக தங்களின் வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கினார்கள். இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிர்சேதம், பொருட்சேதம் குறித்த எந்த விவரமும் தெரியவில்லை.
அண்மையில் கொரானோ வைரஸ் சீனாவை நடுங்கச் செய்த நிலையில் இந்த நிலநடுக்கமும் மக்களை அச்சம் அடைய வைத்துள்ளது.