ஹரியானா மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை முடிவடைந்து இன்று(ஜூலை 1)முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதனால் ஜூலை 1 முதல் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 1 முதல் தினந்தோறும் காலை 8 மணி முதல் மதியம் 2.30 மணி வரை பள்ளிகள் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
அவ்வகையில் தற்போது ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் காலை 8:00 மணி முதல் மதியம் 2.30 மணி வரை முழு அளவிலான வகுப்பு நேரங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் புதுப்பிக்கப்பட்ட நேரத்தை பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.அது மட்டுமல்லாமல் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.