கிரெடிட் கார்டின் தவறான பில் நிறுவனம் மூலமாக வழங்கப்பட்டால் வாடிக்கையாளர்கள் அதற்கு புகார் அளிக்கலாம். இந்த புகாரின் அடிப்படையில் 30 நாட்களுக்குள் நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதனைப் போலவே பில் மற்றும் ஸ்டேட்மெண்ட் அனுப்பர் தாமதம் ஏற்படாமல் இருப்பதை கார்டு வழங்குனர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் கார்டு வாங்குபவர்கள் பில்லிங் விவரங்களை கார்டுதாரர் பெறுவதை உறுதி செய்ய ஒரு அமைப்பினை ஏற்படுத்த வேண்டும்.
ஒருவேளை கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கார்டை மூடுவதற்கு விண்ணப்பித்தால் கிரெடிட் கார்டு வழங்குபவர் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் படி ஏழு வேலை நாட்களுக்குள் அந்த கார்டை மூட வேண்டும். அதன்பிறகு மூடப்பட்ட கார்டுதாரர்கள் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தியாக அவற்றின் மூலம் உடனடியாக மூடப்பட்டது தெரிவிக்க வேண்டும். ஒருவேளை ஏழு நாட்களுக்குள் கிரெடிட் கார்டு வழங்க கூடிய நிறுவனங்கள் கார்டை மூடவில்லை என்றால் அதன் பிறகு நிறுவனத்திற்கு ஒரு நாளைக்கு 600 ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும்.
இதில் முக்கியமான நிபந்தனை என்னவென்றால் கிரெடிட் கார்டு வைத்திருப்பவரின் கணக்கில் பற்று எதுவும் இருக்கக் கூடாது. வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல் அந்நிறுவனம் கிரெடிட் கார்டு வழங்க முடியாது. அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல் கிரெடிட் கார்டு வழங்கி அதற்கு பில் செய்தால் அந்த நிறுவனத்திற்கு அபராதம் செலுத்த நேரிடும்.
இந்த புதிய விதிமுறைகளின் படி பில்லிங் சைக்கிளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 1 ஆம் தேதி முதல் கிரெடிட் கார்டு பில்லிங் சுழற்சி முந்தைய மாதம் 11 ஆம் தேதி தொடங்கி நடப்பு மாதம் பத்தாம் தேதி வரை இயங்கும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.