கடலூர் அருகே அடமானம் வைப்பது போல் வைத்து ரூ98 லட்சம் பெற்றதோடு அடமானம் வைத்த பொருளையும் திருடி சென்று விற்ற வியாபாரிகள் உட்பட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ரூட்டியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் முந்திரி வியாபாரிகளான செல்வமணி மற்றும் கலைமணி ஆகிய இருவரும் தலா 560 என்ற கணக்கில் 1120 முந்திரி முட்டைகளை அடமானம் வைத்து ரூபாய் 90 லட்சம் கடனாக பெற்றனர். இதற்கு பரசுராமன் மற்றும் அவரது மனைவி தேவி ஆகியோர் ஜமீன்தாராக கையெழுத்திட்டனர். இதனை வங்கி அதிகாரிகள் கருக்கை கிராமத்தில் உள்ள குடோனில் வைத்து பூட்டி சீல் வைத்தனர்.
இந்நிலையில் கடன் வாங்கி நாட்கள் பல சென்ற பின்பும் வட்டியும் அசலும் செலுத்தாத காரணத்தினால் வங்கி ஊழியர் முருகேசன் தலைமையிலான குழு முந்திரி மூட்டைகளை பறிமுதல் செய்ய நினைத்து குடோன்க்கு சென்றபோது அங்கு சீல் வைக்கப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டு மூட்டைகள் திருடப்பட்டு இருந்தன. இதையடுத்து அப்பகுதி மக்களிடையே விசாரிக்கையில்,
கடன் வாங்கிய செல்வமணி மற்றும் கலைமணி ஆகியோர் மூன்று பேருடன் வந்து மூட்டைகளை தூக்கி சென்று விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து வங்கி மேலாளர் முருகேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி உத்தரவிட்டது. அதன்படி பண்ருட்டி காவல் நிலைய அதிகாரிகள் செல்வமணி, கலைமணி, பரசுராமன், தேவி, செந்தாமரைக்கண்ணன், சுதாகர், அமர்நாத் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.