Categories
தேசிய செய்திகள்

நெஞ்சமே பதறுது…! தங்கச்சியை ஆண் நண்பர்கள் மூலம்…. பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற அக்கா….!!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் கரும்புத்தோட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். இந்தசமபவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இதில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மூத்த சகோதரியின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை தனியாக அழைத்து தீவிர விசாரணை நடத்தியதில் அவர்தான் இக்கொலையில் முக்கிய குற்றவாளி என்று தெரிய வந்துள்ளது.

இரண்டு சகோதரிகளும் வீட்டில் அடிக்கடி சண்டை போட்டுகொண்டுள்ளனர். சமீபத்தில் 19 வயது மூத்த சகோதரி 4 பேருடன் ஒரே நேரத்தில் பழகி வந்திருக்கிறார். இதனை இளைய சகோதரி கண்டுபிடித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இது குறித்து ஆண் நண்பர்களிடம் பேசி தனது சகோதரிக்கு தக்கபாடம் புகட்ட நினைத்தார். எனவே தனது இளைய சகோதரியை ஊருக்கு வெளியில் இருக்கும் கரும்பு தோட்டத்திற்கு இயற்கை உபாதையை கழித்து வரலாம் என்று கூறி அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே இருந்த அவரின் ஆண் நண்பர்கள் ரஞ்சித் சவுகான், அமர்சிங், அங்கித், சந்தீப் ஆகியோர் இளைய சகோதரியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனர். அதற்கு அப்பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பின்னர் மூத்த சகோதரியின் உதவியுடன் அச்சிறுமி கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாகி உள்ளார். அதன் பின்னர், அப்படியே விட்டால் பிரச்சனையாகிவிடும் என்று சிறுமியை துப்பட்டாவை கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

Categories

Tech |