Categories
தேசிய செய்திகள்

3 ஆண்டுகளுக்குப் பின்…. பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை…..

தெற்கு காஷ்மீர், அமர்நாத் குகையில் உள்ள பனி லிங்கத்தை காண ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகள் யாத்திரை நடைபெறாத நிலையில் இந்தாண்டு மீண்டும் தொடங்கியுள்ளது. அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள நுன்வான் முகாமிலிருந்து முதல் குழு 2 ஆயிரத்து 750 பக்தர்களுடன் இன்று யாத்திரரியை தொடங்கினர்.

இந்த யாத்திரையை துணை ஆணையர் பியூஷ் சிங்லா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையொட்டி பக்தர்கள் யாத்திரை செல்லும் பாதையில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. பக்தர்கள் ஆதார் மற்றும் அடையாள அட்டை காண்பிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 11ஆம் தேதி முடிவடைகிறது.

Categories

Tech |