ஒவ்வொரு ஓய்வூதியதாரர்களும் தொடர்ந்து பென்ஷன் வருவதற்கு தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். வாழ்நாள் சான்று என்பது ஓய்வூதியதாரர் உயிருடன்தான் இருக்கிறார் என்பதற்கான சான்றாகும். இதை சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களுக்கு தொடர்ந்து பென்ஷன் கிடைக்கும். ஒவ்வொரு வருடமும் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதை சமர்ப்பிக்க தவறினால் பென்ஷன் கிடைக்காமல் போகும்.
இந்நிலையில் மாநில அரசின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் இன்று (ஜூலை 1) முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர் வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூபாய் 70 செலுத்த வேண்டும். மேலும் ஆதார் எண், செல்போன் எண், பிபிஓ எண், ஓய்வூதிய கணக்கு விவரங்களை தபால்காரரிடம் தெரிவித்து கைவிரல் ரேகையை பதிவு செய்தால் சில நிமிடங்களில் சான்றிதழ் வீடு தேடி வரும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.