தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள் கடந்த மாதம் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா கொரோனா தொற்று அதிகரிப்பதை தொடர்ந்து முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : “பள்ளி வளாகத்தினுள் தடுப்பு விதிமுறைகளை 100 விழுக்காடு கடைபிடிக்க வேண்டும். மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். மாணவர்கள் அடிக்கடி சோப்பு, கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவ வேண்டும். மேலும் அதிகமான மாணவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் தொற்றுப் பரவ வாய்ப்புள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை சோதிக்கப்பட வேண்டும். உடல் வெப்பம் அதிகமாக இருந்தால் அவர்களை உடனடியாக தனிமை படுத்த வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வகுப்பறைக்குள் நல்ல காற்றோட்டமான சூழல் நிலவ வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.