Categories
தேசிய செய்திகள்

இவள் ஒரு சூனியக்காரி… முத்திரை குத்தப்பட்ட மூதாட்டி கின்னஸில் இடம்பெற்று சாதனை…!!

ஒடிசா மாநிலத்தில் சூனியக்காரி என முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்ட மூதாட்டி, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது வியப்படைய வைத்துள்ளது.

பொதுவாக  கின்னஸ் சாதனையில் இடம்பிடிப்பது சாதாரண விஷயம் கிடையாது. கின்னஸில் இடம் பிடிக்க பலருக்கு ஆசை இருக்கும். ஆனால் அதற்கு  நம்மிடம் ஏதாவது திறமை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். ஒரு சிலர் தங்களது திறமையை பயன்படுத்தி கின்னஸில் இடம் பிடித்துள்ளனர். இப்படி இருக்கும் சூழலில் ஒருவர் கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Image result for Kumari Nayak, a granddaughter of Odisha, is listed in the Guinness Book of Records."

ஒடிசா மாநிலம் கஞ்சம் (Ganjam) மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமாரி நாயக்.. 63 வயதான இவர் பாலிடாக்டைலிசம் (polydactylism) எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாக அவர் கை (12 ) மற்றும் கால்களில் (19) அதிக எண்ணிக்கையில் விரல்களை கொண்டுள்ளார்.

Image result for Kumari Nayak, a granddaughter of Odisha, is listed in the Guinness Book of Records."

இதனால் இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று உலகப் புகழ் பெற்றுள்ளார். இருந்தபோதிலும், இவரை பாராட்டாமல் சுற்றுவட்டார மக்கள் மூட நம்பிக்கையால் சூனியக்காரி என்று வெறுத்து ஒதுக்கப்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

image

இதற்கு முன்னதாக குஜராத் மாநிலத்தின் தேவேந்திர சுதர்  14 கால் விரல்கள் மற்றும் 14 கை விரல்கள் கொண்டதே சாதனையாக இருந்தது. ஆனால் தற்போது அந்த  சாதனையை குமாரி முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |