நடிகை ஸ்ருதிஹாசன் தனக்கு பிசிஓஎஸ் என்ற உடல்நல பிரச்சினை இருப்பதாக வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், எனது உடல்நிலை தற்போது சரியாக இல்லை. சீரற்ற மாதவிடாய் உள்ளிட்ட பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறேன்.இருப்பினும் இதை சரி செய்ய ஆரோக்கிய உணவு மற்றும் நல்ல தூக்கம் ஆகியவற்றை பின்பற்றுகிறேன். இது சமநிலையின்மை மற்றும் வீக்கம் மற்றும் வளர்சிதை மாற்ற சவால்களுடன் கூடிய சவாலான போராட்டம் , ஆனால் நான் இதை எதிர்த்து போராடுவதற்கு பதிலாக இந்த இயற்கையான பிரச்சனையை ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டேன்.
எனது உடல் தற்போது சீராக இல்லை. ஆனாலும் நன்றாக சாப்பிட்டு , தூங்கி , உடற்பயிற்சி செய்ய முடிகிறது . அதற்காக நான் நன்றி சொல்கிறேன் ! எனது உடலில் நான் மகிழ்ச்சியாக இருப்பதனால் அந்த ஹார்மோனும் உடலில் பெருக்கெடுத்து ஓடட்டும் ! இது ஒரு பிரசங்கமாக தெரியலாம். ஆனால் இந்த சவால் ஒரு பயணம் . அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறியுள்ளார்.