Categories
Uncategorized உலக செய்திகள்

ஈரான்-அமெரிக்கா இடையில் மறைமுக பேச்சுவார்த்தை…. இறுதியில் நடந்தது என்ன?….!!!!

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளுடன் ஈரான் சென்ற 2015 ஆம் வருடம் அணு சக்தி ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்த ஒப்பந்தம் ஈரான் யுரேனியம் செறிவூட்டல் திறன், செறிவூட்டல் நிலை, கையிருப்பு போன்றவற்றை கட்டுக்குள் வைக்கவும், நட்டான்ஸ் நகரைத் தவிர்த்து மற்ற இடங்களில் செறிவூட்டும் மையம் அமைப்பதை தடுக்கவும் வகை செய்தது. இதற்கென ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகள் மெல்லமெல்ல விலக்கிக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அமெரிக்க நாட்டில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்த போது செய்துகொண்ட இந்த ஒப்பந்தமானது அந்நாட்டு நலனுக்கு எதிரானது என அவருக்கு பிறகு, அங்கு ஜனாதிபதியாக வந்த டிரம்ப் கருதினார். இதன் காரணமாக அந்த அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. இதையடுத்து அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் இணக்கமான உறவில்லை. இந்நிலையில் உலக வல்லரசு நாடுகளுடன் ஈரானின் சிதைந்த அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் மறைமுக பேச்சுவார்த்தை கத்தார் நாட்டின் தலைநகரான தோஹா நகரில் நடந்தது.

2 தினங்களாக நடந்துவந்த இந்த பேச்சுவார்த்தையானது, எந்த முடிவும் எட்டப்படாமல் முடிந்துவிட்டது. இதனிடையே ஈரான் தன் அணுசக்தி தளங்களில் சர்வதேச ஆய்வாளர்களின் கண்காணிப்பு கேமராக்களை மூடிவிட்டது. இப்போது ஈரானிடம் ஒரு அணு குண்டு தயாரிக்கக்கூடிய அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் தோஹாபேச்சுவார்த்தையானது முடிவு இன்றி முடிந்ததால் ஈரான் மற்றும் அமெரிக்கநாடு ஒன்றையொன்று குற்றம் சாட்டியுள்ளது. அடுத்தட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக எந்தவொரு தகவலும் இல்லை.

Categories

Tech |