தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒருநாள் தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கு பிறகு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Categories