தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒருநாள் தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கலாமா ? என்பது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனை கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது, இரவு நேர ஊரடங்கு, கடைகள், வணிக வளாகங்களுக்கு நேர கட்டுப்பாடு விதிப்பது குறித்து முடிவெடுக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.