பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இருப்பதாவது “சென்னை மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கட்டிட கழிவுகளை அகற்றுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலத்திலும் மண்டல பறக்கும் படைக் குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழுவினரால் இதுவரையிலும் 15 மண்டலங்களில் 528 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. அதேபோன்று 406 மெட்ரிக்டன் கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மழைநீர் வடிகால்களில் இணைக்கப்பட்டிருந்த 94 கழிவு நீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டிருப்பவர்கள் தாமாகவே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். பொதுயிடங்களில் கட்டிடக் கழிவுகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். மழை நீர் வடிகால்களில் விதிகளை மீறி கழிவுநீர் இணைப்பிணை இணைத்து இருப்பவர்கள் அவற்றை உடனே அகற்றவேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் மண்டல பறக்கும் படைக்குழுவினரால் அபராதம் விதிக்கப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.